ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வரை ராஜம்மாள் சமைத்த உணவைத்தான் சாப்பிட்டு வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் சலசலப்பு களுக்கும் உள்ளானது. தமிழக அரசு அதை ஜெயலிதாவின் நினைவு இல்லமாகவும் ஆக்கிவிட்டது.
இதற்கிடையில் சசிகலா சிறைக்கு சென்ற நிலையிலும் ராஜம்மாளுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சசிகலா பிப்ரவரி 9ஆம் தேதி காலை தி. நகரில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பினார். அன்று மதியமே ராஜம்மாள் சசிகலாவின் இல்லத்துக்கு வந்து விட்டார்.
வழக்கம்போல் இனி நானே உங்களுக்கு சமைத்து தர வேண்டுமென்று ராஜம்மாள் விடுத்த கோரிக்கையை சசிகலா ஏற்றுக்கொண்டார். நேற்று மதியம் சூப் வைத்து பிறகு மதிய உணவையும் ராஜம்மாள் சமைத்தார்.
ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ராஜம்மாள் 17 ஆவது நபராக அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் அவர் ஆணையத்தில் ஆஜராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.