மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்தும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரியும் தொமுச, ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில்… பிரதமர் மோடியின் செயல்பாடு விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் நாங்கள் தமிழ்நாடு இல்லை என்றாலும் சுற்றுலாவிற்காக வந்தபோது இங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை பார்த்து உணர்வுபூர்வமாக பங்கேற்றதாகவும் கூறினர்.