மதுரை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும்.இந்த நிலையில், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பங்கேற்றனர்.