மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது.TN -38/BC – 2506என்ற எண்ணுள்ள கண்டெய்னர் லாரி மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்கு அருகே கன்டெய்னர் லாரி ஒன்று வந்தபோது தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டதில் கஞ்சா பண்டல் பண்டலாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர். தனிப்படை போலீசார்
போலீசார் நடத்திய விசாரணையில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்டதேவன் பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ராமு மகன் மலைச்சாமி என்பவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் இவற்றை உசிலம்பட்டிக்கு கொண்டு சென்று சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து மதுரை மாநகரின் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் லாரியில் இருந்த 300 கிலோ கஞ்சாவையும் லாரியையும்
பறிமுதல் செய்தனர்
தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவற்றை சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் நேரில் வந்து பார்வையிட்ட
மதுரை சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது.
கஞ்சா மூட்டைகளோடு லாரி ஒன்று மாநகரத்தை சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வாகன சோதனை நடத்திய போது 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்த மலைச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய பலரை பிடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
600கிலோ வரை ஒரு மாதத்தில் மதுரை மாநகரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்றார். சினிமா பாணியில் போலீசார் வாகன சோதனையில் செய்தபோது கஞ்சா சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்