மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் நேற்று மாலை வேலுச்சாமி (61) என்ற அந்த வழியாக கடைக்கு சென்ற பொழுது அந்த பகுதியில் மது போதையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்கள் சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் மீது பட்டாசுகளை பற்றவைத்து வீசியுள்ளனர்
இதனால் பொதுமக்கள் பதறியடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளனர் இந்த நிலையில் அந்த வழியாக சென்ற முதியவர் இளைஞர்களை அழைத்து இதுபோன்று செய்யக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்
அப்போது முதியவரை பீர்பாட்டில்களால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு நாங்கள் மிகப்பெரிய ரவுடி எங்க ஏரியாவில் வந்து எங்களுக்கு அறிவுரை சொல்கிறாய் என கூறி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து முதியவர் வேலுச்சாமி கீரைத்துறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் பொதுமக்கள் மீது பட்டாசு வீசி அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு, முதியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிந்தாமணி போஸ்ட் ஆபிஸ்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன், பாலு மற்றும் கவட்டை என்ற முத்துச்சாமி ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.