பொன்னமராவதி பொன்னமராவதி பகுதியில் மின்மயானம் கட்ட இடத்தை தானமாக வழங்கிய நபருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்..
நவீன எரிவாயு மயானத்திற்காக இடம் தேர்வு செய்த வகையில் ஏற்பட்ட தடங்கலை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்கனவே அனைவரும் பயன்படுத்தும் மயானம் பட்டா இடமாக இருந்ததால் தேர்வு செய்ய இயலாத நிலையில் இடத்தின் உரிமையாளர் வலையபட்டியை சேர்ந்த அடைக்கப்ப செட்டியார் மனைவி தேனம்மை ஆச்சியை அணுகி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இடத்தை ஆணையருக்கு தானமாக பத்திர பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு செய்துள்ளார்கள். அது சமயம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆச்சிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருடன் தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் காங்கிரஸ் நகர தலைவரும்,மாநில பொதுக்குழு உறுப்பினருமான பழனியப்பன், காங்கிரஸ் வட்டார துணை தலைவர் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.