பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

271

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்து கழகபணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் என 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 450 சிறப்பு பேருந்துகளை இயக்கவும்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 9445014450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களில் அறியலாம். கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் தலா 5, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, tnstc இணையதளம் அல்லது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here