கொடைக்கானல் அருகே பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.சி. பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயதான மாலதி என்பவரும், 25 வயதான சதீஷ் என்பவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் 4 வயதில் குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சதீஷ் அண்மையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் அதிர்ச்சியடைந்த மாலதி, சதீசின் தந்தை நடத்தி வரும் டீக்கடை முன்பு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உடல்கருகி பலியானார்.
இதை சதீசின் சகோதரரான 30 வயதான சரவணக்குமார், செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.