புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக
மெர்சி ரம்யா IAS நியமனம்
இவர் நாகர்கோவில் மாவட்ட கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி மையத் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்) நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சிவில் சர்வீஸஸ் தேர்வு: புவியியலை விருப்பப் பாடமாக எடுத்த சென்னை மாணவி ஆவார் 32-வது ரேங்க்!
இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் சென்னை மாணவி மெர்சி ரம்யா 32-வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். ( 2014 )
பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸை சென்னையில் படித்து முடித்தேன். அதன் பிறகு சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதி வந்தேன். இது எனது மூன்றாவது முயற்சி. இந்த முறை வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், பெண் கல்வியிலும் கவனம் செலுத்துவேன். ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த என்னால் முயன்றவரை முயற்சி செய்வேன் என்றார். இவரது தந்தை ஐசக் சாமுவேல் வழக்குரைஞராக உள்ளார். தாயார் பொன்முடி சுடரொளி..
பணிச்சிறக்க newsnowtamilnadu.com செய்தி குழுமம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது