புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!

374

புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது..

விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார், நகராட்சி நியமன குழு தலைவர் வளர்மதி சாத்தையா, அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்..

முன்னதாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சங்க உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட காதுகேளாதோர் சங்க தலைவர் முகமது தாஹிர் அனைவரையும் வரவேற்றார்..

விழாவில் வேலை வாய்ப்புகளில் கல்வி நிறுவனங்களில் சைகை மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் பொது அலுவலக வளாகங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் வேலைவாய்ப்புகளில் 7%சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் மாதந்தோறும் 3000 முதல் 5000 உதவி தொகை வழங்க வேண்டும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here