அவர் அனுப்பியுள்ள மனு பின்வருமாறு
அனுப்புனர் :கா.காவுதீன், மாவட்டத் தலைவர்,
நாம்தமிழர்கட்சி,
வடக்குவீதி வயலோகம் அஞ்சல் இலுப்பூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை.
அம்மா வணக்கம்,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியாகும் மருத்துவகழிவுநீர் மற்றும் பிணக்கூறாய்வு அறையிலிருந்து வெளிவரும் கழிவுநீர், மனிதக்கழிவுகள் அனைத்தும் (துர்நாற்றம் மிக்க கழிவு தண்ணீர்) பக்கத்தில் உள்ள கிராமங்களான புது ராசாபட்டி குடிநீர் (ஊரணி) குளத்திலும், முள்ளூர் (பசுக்குளம்) பாசனகுளத்திலும், தென்னத்திராயன்பட்டி பாசனகுளத்திலும், கலக்கின்றது.
இதனால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த நோய்த்தொற்று அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர், மேலும் மனிதர்கள் ஆடு மாடுகள் குடிநீராக பயன்படுத்தும் குளங்களில் கழிவுநீர் கலப்பதால் உயிர்ச்சேதம் உடல் உபாதைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர், மேலும் பாசனத்திற்கு பயன்படும் தண்ணீரில் மருத்துவ ரசாயன கழிவுநீர் கலப்பதால் விவசாயத்திற்கு பயன்படுத்தவும் அந்தக் கழிவு நீரில் இறங்கி உழவு நடவு போன்ற வேளாண்மைத் தொழில் செய்யவும் அருவருப்பும் அச்சமும் ஏற்படுகிறது, என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர், இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அம்மா அவர்கள் வேளாண்மையை நம்பி கிராமத்தில் ஆடு மாடுகளுடன் வசித்துவரும் மக்களுக்கு மருத்துவ கழிவுநீர் குளங்களில் கலப்பதை தடுத்துநிறுத்தி அந்தகிராம மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தி வாழ்வாதாரத்தை தூய்மையானதாக்கி வாழ வழிவகை செய்ய பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வைத்துள்ளார்