புதுக்கோட்டை மாவட்டம்
அன்னவாசல் அருகே விபத்தில் தாய் தந்தை இழந்த துயரம்.. ஆதரவுக்கு யாருமின்றி கண்ணீரோடு பறிதவிக்கும் 3 பெண் குழந்தைகள்…அரசு ஆதரவு கரம் நீட்டி அரவணைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

586

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி.50 வயதான இவர் மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா இவர் வாதிரிப்பட்டியில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு சுவேதா (15) மதுமிதா (14) அபிதா (9) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று வாதிரிப்பட்டியில் இருந்து பழனிச்சாமி அவரது மனைவி மல்லிகா ஆகியோர் திருமயம் அருகே உள்ள அரன்மனைப்பட்டியில் அவர்களது உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமியும், மல்லிகாவும் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தால் வாதிரிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கிய நிலையில் அந்த தம்பதியினரின் 3 பெண் குழந்தைகளும் தாய் தந்தையை இழந்த சோகத்தில் கதறி அழுதகாட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த நிலையில் பழனிச்சாமியின்
3-வதுமகள் அபிதா கூறியபோது எங்களது தாய் தந்தை இறந்து விட்டனர். எங்களுக்கு எந்த சொந்தமும் இல்லை இப்பொழுது நாங்கள் அனாதையாகிவிட்டோம். எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும் என கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:பழனிச்சாமியும் மல்லிகாவும் கூலி வேலை செய்து தன் மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வந்ததாகவும் தற்போது அவர்கள் இருவரும் விபத்தில் இறந்து போக இந்த மூன்று குழந்தைகளும் ஆதரவுக்கு யாருமின்றி நிர்க்கதியாக தவிப்பதாகவும் தங்களால் அந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை மட்டுமே சில நாட்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஆனால் அவர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும் ஆனால் அரசு உரிய உதவிகளை செய்து அந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வி பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிசெய்து மூன்று பெண் குழந்தைகளின் வாழ்விலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென கிராம மக்கள் இயக்கத்தோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விபத்தில் தாய் தந்தையை ஒரே நேரத்தில் பறிகொடுத்த மூன்று பெண்குழந்தைகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அரவனைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here