புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளான அஇஅதிமுகவின் “கோடை கால தண்ணீர் பந்தல்”..

266

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அஇதிமுக சார்பில் மாவட்ட முழுவதும் கோடைகால தண்ணீர் பந்தல் பொதுமக்கள் அமோக வரவேற்பு!

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களுடைய தாகத்தை தீர்க்க ஆங்காங்கே தண்ணீரை தேடி சூழ்நிலை உருவாகியுள்ளது..

தண்ணீர் தாகத்தை போக்கும் விதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அஇஅதிமுக வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்டத்தில் சார்பில் விராலிமலை சட்ட மன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்து அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட முழுவதும் அஇதிமுக நிர்வாகிகள் ஏற்பாட்டில் புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் குறிப்பாக மாவட்டத்தில் கீரனூர், விராலிமலை, குன்டனார்கோவில், கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இலவசமாக மோர், தண்ணீர், குடிநீர் பானங்கள், பழங்கள், போன்றவை வழங்கி தண்ணீர் தாகம் போக்கக்கூடிய அனைத்து வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்..

புதுக்கோட்டை மாவட்டத்தில்
அதிமுகவினர் இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆமா யார் ஆளும் கட்சிக்கு!

நமக்கு ஏன் வம்பு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here