தமிழக முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த வாரம் அறிவித்தார் .. இதன் தொடர்ச்சியாக தமிழக முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த மாவட்டங்களில் விருப்பம் மனுவை பெற்றுக் வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகள் உட்பட்ட பேரூராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்
போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.. புதுக்கோட்டை நகராட்சியில் 10 மேற்பட்ட வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வெட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..



இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் பேசுகையில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்…