புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் “விதைக்கலாம்” அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது

429

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு வை. முத்துராஜா அவர்கள் கலந்துகொண்டு விதைக்கலாம் அமைப்பிற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு கொடைச் செம்மல் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி அவர்கள் சமூக சேவை அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்தவர்களுக்கு இயற்கை காவலர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ஐடியா பிளஸ் நிறுவனர் திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றி அமைப்பிற்கு ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். நிகழ்வில் கிராமிய இசை பாடல்கள் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தம்பதியினர், மூத்த வழக்கறிஞர் திரு. சொக்கலிங்கம், கவிஞர் மூ.கீதா, விதைக்கலாம் அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு நாகபாலாஜி அவர்கள் நன்றி கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here