மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சுனிதா துக்கல் அவர்களிடம் இருந்து மௌண்ட் சீயோன் பள்ளி களின் தலைவர் முனைவர். ஜோனத்தன் ஜெயபரதன் அவர்கள் விருதை பெற்றுக் கொள்கிறார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. ஜெய பிரதா அவர்களிடம் இருந்து மௌண்ட் சீயோன் பள்ளிகளின் நிர்வாக ஆலோசகர் திரு. செல்வராஜ் தாசன் கேடயத்தை பெற்றுக்கொள்கிறார். உடன் மாண்புமிகு இந்திய தூதர் ஜி20 மற்றும் ஜி7 திரு. சுரேஷ் பிரபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவப்பிரத சுக்லா உள்ளனர். மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.