மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுக்கும் கோரிக்கை!
வேகத்தை அதிகரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும்
மாவட்டத்தில் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன குறிப்பாக நகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறை, மின்வாரியம், ஊரக உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்சம் கரை புரண்டு ஓடுகிறது..
நாள்தோறும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஆவணங்கள் கோரிக்கைகள் குறித்து அணுகும் நிலையில் சமீப காலமாக பகிரங்கமாக லஞ்சம் கேட்கப்படும் சூழலை காண முடிகிறது..
தற்போதைய இந்த நிலையால் மக்கள் லஞ்சம் கொடுக்க மறுக்கும் நிலையில் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..
இலை மறை காயாக லஞ்சம் பெற்ற நிலை மாறி தற்போது பகிரங்கமாக இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது..
மாவட்டத்தை பொறுத்தவரையில் ஏராளமான அதிகாரிகள் லஞ்சத்தில் நனைந்து உள்ளனர்.
இதை கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை கண்டும் காணாமல் உள்ளது..
இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..
அதேபோல் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் தொலைபேசி எண்களை மக்கள் கண்ணில் தெரியும் படி வகையில் அறிவிப்பு பலகை இடம்பெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக உள்ளது..
அரசு அலுவலகங்களில. பெருகி உள்ள லஞ்சத்தால் ஏழை நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர.
லஞ்சம் மட்டும் குறிக்கோளுடன்
ஈடுபடும் சில குறிப்பிட்ட அரசு அதிகாரிகளின் செயலை தடுக்க ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையின் அலைபேசி எண்கள் நுழைவாயில் இடம்பெற செய்ய வேண்டும்..
அரசு அலுவலகங்களில் அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஏழை எளிய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
.
பல்வேறு பெருமையை கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் தற்போது லஞ்சத்தில் முழ்கி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது