புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் வருகை.. காட்சி ஊடகம் முதல் அச்சு ஊடகம் வரை விளம்பரம் என்ற பெயரில் அலைகழிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்…

1156

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்திற்கு பங்கேற்க 22.10.2020 அன்று வர உள்ளார்.. இதனை தொடர்ந்து முதல்வர் வரவேற்கும் விதமாக பல்வேறு விளம்பரம் பேனர்கள் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன… குறிப்பாக விராலிமலை, புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில், நகர் பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கப்பட்டுள்ளது.. முதல்வர் ஒரு மாவட்டத்திற்கு வருகை தர போது விளம்பரம் மத்திய அரசாலும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் பிரித்து பகிர்ந்து அளிக்கப்படுவது வழக்கம் ..

இந்த தடவை குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு மட்டும் விளம்பரங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

குறிப்பாக புதுக்கோட்டை, மற்றும் அறந்தாங்கி நகராட்சியில் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் தாங்கள் விருப்பத்தின் பேரிலேயே குறிப்பிட்ட அச்சு ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரம் வாரி வழங்கபட்டதாக தகவல்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்துள்ள அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, சார்பிலும் விளம்பரம் வழங்கபட்டுள்ளன…

இதை யார் நிர்ணயம் செய்வது, யார் எவ்வளவு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொகை என விவரங்களை அடங்கிய பட்டியலை களப்பணி செய்து வருகிறோம்.. விரைவில் பாரபட்சமின்றி வெளியிடுவோம்..

முதல்வர் பங்கேற்பு விழா முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் இந்த விளம்பரம் தொடர்பாக உண்மையில் நடந்தது என்ன ஆய்வு செய்து எந்த எந்த பத்திரிகைகளுக்கு எவ்வளவு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான தொகையை எவ்வளவு என அவர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here