புதுக்கோட்டை மருத்துவகல்லூரியில் சிசேரியன் செய்த பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

388

புதுக்கோட்டை
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு.

புதுக்கோட்டை கைக்குறிச்சி சேர்ந்த வீரன், வீராயி தம்பதியின் இரண்டாவது மகள் ராணி வயது 25. இவருடைய கணவர் முத்துக்குமார் வயது 27. முத்துக்குமார் ஒரு நெசவுத் தொழிலாளி.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் முடித்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. முத்துக்குமார் ராணி தம்பதியினர் பொள்ளாச்சியில் தற்சமயம் வசித்து நெசவு தொழில் வேலைசெய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ராணிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யபட்டதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் ராணி புதுக்கோட்டை கைகுறிச்சியில் வசித்து வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி ராணிக்கு அதிகமான வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ராணியின் உடலை டாக்டர் பரிசோதனை செய்யும்போது அவர் கருவுற்று இருந்தது தெரியவந்தது. மேலும் கர்ப்பமானது டியூப் பகுதியில் இருப்பதால் அது ராணியின் உயிருக்கு ஆபத்தானது என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை ராணிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது ராணிக்கு இதயதுடிப்பு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் தற்பொழுது ராணியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
மேலும் ராணியின் மரணத்திற்கு காரணமாகவும் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மரணமடைந்த ராணியின் தங்கை தங்கால் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத வரை உடலை வாங்க மாட்டோம் என நேற்று அறிவித்த நிலையில் இன்று இறந்த ராணியின் உறவினர்கள் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்தத நகர காவல் ஆய்வாளர் குருநாதன் கணேஷ் நகர் ஆய்வாளர் ஜாபர் தலைமையிலான போலீசார் உயிரிழந்த ராணியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால் பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சமரச பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இறந்த ராணியின் உறவினர்கள் மற்றும் இந்திய மாதர் சங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here