புதுக்கோட்டை நகர் பகுதி அருகாமையில் உள்ள மிகப்பெரிய நீர்பிடிப்பு பகுதி ஆலங்குளம்..
நகரின் வளர்ச்சி காரணமாக விவசாய நிலங்கள் அழிந்து தற்போது குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது இருப்பினும் நிலத்தடி நீர்மட்ட தேவைக்காக இந்த மிகப்பெரிய குளத்தை பராமரித்து தூய்மைப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும் நகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர் .

சமீபகாலமாக நகர்ப்புறத்தில் சேகரமாகும் குப்பைகளையும் இடித்த கட்டிட கழிவுகளையும் கொட்டுவதால் இந்த குளத்தின் உள்பகுதியில் கொட்டுவதால் பல்வேறு நோய்களை பரப்பும் காரணிகளாக இந்த குளம் மாறி வருகிறது
இது தவிர குளத்தில் நோய்களைப் பரப்பும் பன்றி கூட்டமும் மிக அதிக எண்ணிக்கையில் சுற்றித் திரிகிறது
ஆங்காங்கு தேங்கும் மழை நீரும் குப்பைகளில் தேங்கும் நீரும் கொசுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது..
ஆனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி டெங்கு மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்
சமீபத்தில் முதல்வர் அறிவித்த குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆலங்குளத்தை தூய்மைப்படுத்தி எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் ஆலங்குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி முட்புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
மேலும் தற்பொழுது அதிகரித்துவரும் குடியிருப்புகளில் எதிர்காலத் தேவைகளை பாதுகாக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் குளத்தில் குப்பைகளை போடுவதை தவிர்க்கவும் சாக்கடைகள் கலப்பதை தடுக்கவும் பொதுப்பணி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நகராட்சி ஆகியவை இணைந்து செம்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்