கொரோனா தொற்று பாதிப்பால் தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதனால் நாளடைவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது..
இருப்பினும் தமிழக முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து விட கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் அறிவித்துள்ளது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட இரண்டு அம்மா உணவகங்களில் பழைய பேருந்து நிலையம் மற்றும் ராணியார் அரசு மருத்துவமனை உள்ள அம்மா உணவகங்களில் ஓரு மாதத்திற்கு உணவு கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் மொத்த செலவைத் தான் ஏற்றுக் கொண்டு ரூபாய் 150,000 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்) காசோலையை சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அவர்களிடம் வழங்கினார்…
இதன் படி கட்டணமில்லாமல் காலை, மதியம் இரண்டு வேளையும் உணவு வழங்கப்படும். தேவை ஏற்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்” எனக் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது..
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, நகர செயலாளர் நைனா முகம்மது, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..