புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் புதுக்கோட்டை வட்டம் பெருங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டான்குடியில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டித்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா இன்று திறந்து வைத்தார்..
தொடர்ந்து துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா செவிலியர்களிடம் போதிய மருத்து இருப்புகள், மருத்து உபகரணங்கள், மருத்துவ வசதிகள் கேட்டு அறிந்தார்..
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கம்மாள் பழனிச்சாமி, துணை தலைவர் லெட்சுமி ராஜேந்திரன், திமுக மாணவரணி நிர்வாகி வெற்றிவேல், கவிநாடு ஊராட்சி செயலர் ராஜேந்திரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், மாலையீடு வட்டச் செயலர் பிரபு, கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் உட்பட்ட பல கலந்து கொண்டு சிறப்பித்தனர்..