புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோயில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். மேலும் தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும். இது குறித்து மேற்கொண்டு தேவையான விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.