புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார்!

162

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.08.2023) முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைப்பதை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டங்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் சிறுநாங்குபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி பயிலும் சிறார்களுக்கு காலை 8 மணி அளவில் காலை உணவினை கவிநாடு கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கம்மாள் பழனிச்சாமி, 15வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி வெள்ளைச்சாமி வடக்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட தலைவர் அம்மையாப்பட்டி வெற்றி, கவிநாடு கிழக்கு ஊராட்சி செயலர் ராஜேந்திரன், கவிநாடு கிழக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சிறுநாங்குபட்டி பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here