புதுக்கோட்டை அருகே விவசாயத்திற்கு பயன்படும் வரத்து வாய்க்கால் காணோம்!
பல முறை புகார் அளித்தும்
கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்! மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை!
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேலவட்டம் பகுதியில் பாரதிநகர் வீட்டு மனைகளுக்கு இடையே செல்லும் வரத்து வாய்க்காலை காணோம் என்று விவசாயி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மேலும் இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில் காலம் காலமாக விவசாய செய்து வருகிறோம் எனவும் தற்போது வரத்து வாய்க்கால் காணோம் என்றும் சிலர் அதை ஆக்கிரமிப்புகள் செய்து உள்ளனர் என புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்த விவசாயி குற்றசாட்டு கூறி வேதனை தெரிவித்துள்ளார்..
நீர்நிலை இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்கள் வலியுறுத்தி நிலையில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செய்து நில ஆக்கிரமிப்பு செய்து வரும் மீது உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..