புதுக்கோட்டை அடுத்த லேனா விளக்கில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் உலக சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாட்டு வீரர் பிரக்யானந்தாவிற்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கும் வகையில் நிலவில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து செல்வதைப் போல மாணவர்கள் காட்சிப்படுத்தியும் சதுரங்க வடிவில் மாணவர்கள் நின்று பிரக்யானந்தாவிற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மூலம் அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்
நிலவின் தென் துருவத்தில் சந்திரியான் மூன்று விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரை இறக்கி அதிலிருந்து பிரக்யான் ரோவரை பிரித்து ஆய்வை தொடங்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். அதேபோல் உலக சதுரங்க போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீரர் பிரக்யானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவுக்கு கிடைத்த இந்த இரண்டு வெற்றிகளையும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அடுத்த லேனா விளக்கில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 6500 மாணவர்கள் ஒன்றாக இணைந்து சந்திரியான் 3 விண்கலம் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் உலக சதுரங்க போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாட்டு வீரர் பிரக்யானந்தாவிற்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கும் வகையில் நிலவில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஊர்ந்து செல்வதைப் போல மாணவர்கள் காட்சிப்படுத்தியும் சதுரங்க வடிவில் மாணவர்கள் நின்று பிரக்யானந்தாவிற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மூலம் அஞ்சல் அட்டைகளை அனுப்பினர். மேலும் அங்கு கூடியிருந்த மாணவர்கள் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி இந்தியா படைத்த சாதனையை கண்டு கொடிகளை அசைத்தும் வண்ண பலன்களை பறக்கவிட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதில் பள்ளி மாணவர்கள் விண்வெளிக்கு செல்வதை போல உடை அணிந்து வந்தது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் கூறுகையில்: இந்தியா தற்போது இரண்டு வெற்றிகளை கொண்டாடி வருகிறது ஒன்று சந்திரன் மூன்று வெற்றி மற்றொன்று பிரக்யானந்தாவின் வெற்றி இந்த இரு வெற்றிகள் மூலம் நாம் இந்தியர்கள் என்பதை பெருமிதம் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதாகவும் மேலும் இரண்டு வெற்றிகளையும் கொண்டாடும் வகையில் இன்று நிலாவில் பிரக்யான் ரோவர் பிரிந்து செல்வதை செய்து காட்டியும் அதேபோல் சந்திராயான் ஒன்று இரண்டு செயல்பாடுகளை நினைவு கூர்ந்தும் சந்திராயான் மூன்று வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்பதை பற்றி விலாவாரியாக எடுத்துக் கூறப்பட்டதாகவும் அதே நேரத்தில் உலக சதுரங்க போட்டியில் பிரக்யானந்தா பெற்ற வெற்றியை கொண்டாடியும் தற்பொழுது இந்தியா விண்வெளியிலும் விளையாட்டிலும் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.