புதுக்கோட்டை
புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மச்சுவாடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கணேசன்(63) என்பவர் டயாலிசிஸ் செய்வதற்காக சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் தனி அறையில் வைத்து கணேசனை டயாலிசிஸ் செய்யாமல் கதவில்லாத கழிவறை அருகே டயாலிசிஸ் செய்யும்போது பார்மலின் என்ற திரவத்தைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யத போது அதிலிருந்து வந்த புகையால் கணேசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியும் மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டால் தான் கணேசன் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வருகின்றனர், மேலும் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். தற்போது கணேசனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.