புதுக்கோட்டை அருகே காவல் உதவி பெண் ஆய்வாளர் வழக்கறிஞர்கள்  தொந்தரவால்   பொதுநாட்குறிப்பில் (GD)  நடந்தவற்றை எழுதி வைத்து தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி? இந்த நிகழ்வால் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

2613

புதுக்கோட்டையில் மன உளைச்சல் காரணமாக திருக்கோகரணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்கம் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணையில் இறங்கிய நமது செய்தி குழுவிடம் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு ஒன்று சம்பந்தமாக வழக்கறிஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக அதனை தொடர்ந்து உதவி பெண் ஆய்வாளர் சங்கீதாவை ஆபாசமாகவும் முரண்பாடுயாக

திட்டியதாக கூறப்படுகிறது.. மேலும் இது சம்பந்தமாக உதவி பெண் ஆய்வாளர் சங்கீதா காவல் நிலைய பொதுகுறிப்பில் (GD) இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாகவும் உதவியாக இருந்ததாகவும் வழக்கறிஞர்கள் தொந்தரவால் தான் தூக்கம் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் இது வழக்கறிஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் அந்த பொதுகுறிப்பில் இடம்பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

இப்படி ஓரு பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு ஏற்பட்ட தொந்தரவு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here