புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி கல்லூரியில் முறைகேடாக வசூலா? பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!

623

முறைகேடாக வசூல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர கோரி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது..

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் 2021 – 2022 கல்வியாண்டில் வரலாற்று துறை முதலாம் ஆண்டு 73 மாணவிகளுக்கு ஒரு பருவத்திற்கு 775 ரூபாய் என்று இரண்டு பருவத்திற்கு சேர்த்து வகுப்பு பொறுப்பு ஆசிரியர் 1550 வசூல் செய்து மொத்தம் 1,13,150 துறை தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது..

சென்ற ஆண்டிலிருந்து கொடுக்கப்பட்ட பணத்திற்கு மாணவிகள் ரசீது கேட்டும் இன்னும் தரவில்லை. அப்படி ஒரு கட்டணம் வசூலிக்க கூடாது முறைகேடாக வசூல் செய்ததால் ரசீது தர மறுக்கிறார்கள். எனவே வசூல் செய்த பணத்தை நான் வாங்கவே இல்லை என மறுக்கும் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வசூல் செய்த பணத்தை திருப்பி தரக் கூறியும் மாவட்ட ஆட்சியர் உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது…

இதில் மாவட்ட செயலாளர் சா.ஜனார்த்தனன்,துணை தலைவர் இரா.வசந்தகுமார்,
நகர தலைவர் சோ.மகாலக்ஷ்மி உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here