புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Advertisement -
Latest article
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...