புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி கடன் நிகழ்ச்சியில் நடந்த புகைச்சல்! அதிர்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!

260

திட்டமிட்டு முயற்சி எடுத்து செலவு செய்து, நிகழ்ச்சி நடத்தியது நாடாளுமன்ற உறுப்பினர்..

பெயர் என்னவோ அமைச்சருக்கு சென்றது..

அதிர்ச்சியில் உறைந்து போன நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவில் கோஷ்டி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது புதுக்கோட்டை கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்ததே!

இந்த நிலையில் கடந்த மாதம் (25.09.2023) அன்று புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம் அப்துல்லா அவர்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்புடன் நடைபெற்றது…

கிட்டத்தட்ட 1650 மாணவர்கள் பங்கு பெற்றுக் கல்விக் கடன் பெரும் மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்தது..

இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம். அப்துல்லா மற்றும் அவரது அலுவலகத் தோழர்களும் உழைத்து வந்தார்கள் அனைவரும் அறிந்ததே!..

தொடர்ச்சியாக வங்கி அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி அவர்கள் தரப்பில் செய்ய வேண்டிய விசயங்களை தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் உறுதி செய்ததோடு.. கல்லூரி முதல்வர்களை அழைத்து கூட்டங்களை நடத்தி மாணாக்கர்களிடம் கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை உருவாக்கினார்கள்..

புதுக்கோட்டை ஆட்சியர் திருமதி. மெர்சிரம்யா அவர்களிடம் கோரிக்கை வைத்து ‘’மாணாக்கர்கள் ஒரே நாளில் இருப்பிட, சாதி , வருமானம் உள்ளிட்ட இன்ன பிற சான்றிதழ்களை ஒரே நாளில் பெற’’ வருவாய் அலுவலர்களின் ஒத்துழைப்பை பெற்றதோடு வருபவர்களுக்கான போக்குவரத்து துவங்கி உணவு ஏற்பாடு வரை அத்தனையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எம். அப்துல்லா அவர்கள் திட்டமிட்டு திட்டமிட்டபடி செய்தார்கள்..

இது முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் யாரிடமும் நன்கொடை கூட பெறாது தனது சொந்த நிதியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது….

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இ. ஆ.ப தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்றனர்..

ஆனால் செய்திகள் சுற்று சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனை மட்டுமே முன்னிலைப்படுத்தி முன்னனி நாளிதழ்களில் வெளியாகின…

இந்த செய்தி வெளியானதும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆதரவாளர்கள், தோழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

யாரோ ஒருவர் செய்யும் சிறு தவறு ஒரு செய்தியையே எப்படி தலைகீழாக மாற்றி விடுகிறது!

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எம் அப்துல்லா அவர்கள் மாணவர்கள் இந்த உதவியின் மூலம் நன்கு படித்து உயர்ந்தால் அதுதான் செய்தியை விட எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று பெரும்பான்மையுடன் தனது அடுத்த பணியை சிறப்பற செய்ய தொடங்கி விட்டார்..

இந்த நிகழ்வை பார்க்கையில் “கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல ” என்ற பழமொழியை ஞாபகப்படுத்தியது!

கல்வி கடன் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம். எம். அப்துல்லா அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள், மாணவ மாணவிகள் சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது NEWSNOWTAMILNADU. COM செய்தி ஊடக இணையதளம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here