புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும்  நிர்வாகிகள்!  தமிழக பாஜக மேலிடம் கண்டுகொள்ளுமா?

635

புதுக்கோட்டையில் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும்  நிர்வாகிகள்!  

வரும் நவம்பர் 6ஆம் தேதி புதுக்கோட்டையில்  “என் மண் என் மக்கள்”   நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்ட நகர் பகுதிக்கு வருகை தர உள்ளார்..

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை பாஜக பொருளாளர் முருகானந்தம் ஏற்பாட்டில் புதுக்கோட்டை நகர் முழுவதும் பிளக்ஸ் பேனர்களால் சூழ்ந்துள்ளது..

குறிப்பாக விபத்துக்கள் அசம்பாதம் ஏற்படும் வகையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் இருந்து புதிய பேருந்து நிலையம் சென்டிர்மீடியன் களில் இறுதி வரை பிளக்ஸ் பேனர்கள் சரமாரியாக வைக்கப்பட்டுள்ளது..

இந்த சத்தியமூர்த்தி சாலைபிரதான சாலையாக இருப்பதால் போக்குவரத்துக்கள்  நெருக்கமாக இருக்கும்..

இந்த நிகழ்வை பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

இது குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் பேசுகையில் நாங்கள் அனுமதி வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது!

  அசம்பாவிதம், விபத்துகள், ஏதும் நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மக்கள் பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்டு வரும் நிலையில் மக்களுக்கு இடையூறாகவோ பிரச்சனைகள் ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் நிகழ்வை அனுமதிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here