புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்..
இந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
ஆனால் தேர்தல் ஆணையம் கண்டும் கண்டுகொள்ளாதவாறு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது..
குறிப்பாக விராலிமலை தொகுதியில் ஆளும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் முதல் 5000 ரூபாய்
வரை பணம் பட்டுவாடா நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
ஆனால் எவ்வித நடவடிக்கையும் தேர்தல் நடத்தும் அலுவலர் எந்த வித நடவடிக்கையையும் ஈடுபடவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது..
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை சார்பில் ஆளும் கட்சி சார்பில் 1000
ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையும் ஒரு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாகவும் எதிர்க் கட்சி சார்பில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாயும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெற்று வருவதாகவும் இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்..
.