புதுக்கோட்டையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பிரமாண்ட தண்ணீர் பந்தல் அமைத்த புதுக்கோட்டை மாவட்ட திமுக மருத்துவரணி!
பொதுமக்கள் நன்றி..

440

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும். திமுக சார்பில் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் எனவும் சாலை மற்றும் தெருக்கள் ஓரமாக, போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறு இன்றி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் தலைமை கழக சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் அவர்கள் ஏற்பாட்டில்

புதுக்கோட்டை திமுக அலுவலகம் முன்பாக அமைக்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி (4-4-2023) அன்று திறந்து வைத்தார்கள்..

கோடை வெப்பத்தில் தவித்து வரும் புதுக்கோட்டை ஏழை எளிய பொதுமக்கள், வயதானவர்கள், குழந்தைகள் என திமுக மருத்துவரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர், மோர், குளிர் பானங்கள், பழங்கள் உள்ளிட்ட தாகம் தணிக்க ஆர்வமுடன் வாங்கி உண்ணும், அருந்தியும் சென்று வருகிறார்கள் ..

தொடர்ந்து. நம்மிடம் பேசிய திமுக மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் திராவிட மாடல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் போற்றும் மகத்தான ஆட்சியில் கழக இளைஞர் அணி செயலாளர் சின்னவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் மக்கள் தாகம் தீர்க்க வகையில் தினமும் 7000 ரூபாய் செலவில் 100 நாட்களுக்கு இந்த தண்ணிர் பந்தல் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளதாக கூறினார்…

தாகம் தணிக்க ஏற்பாடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் புதுக்கோட்டை மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் அவர்களுக்கும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் வருகின்றனர்..

இந்த நிகழ்வில் திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் செந்தில் , திமுக வீரமணி ராஜேஸ்வரி தமிழ்ராஜா ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here