புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

772

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல். இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வருகிறார். முருகானந்தம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பழனிவேல் ஒப்பந்ததாரராக உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், மூன்று பேரும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றில், எல்இடி தெரு விளக்குகள் அமைக்கும் பணியை எடுத்து செய்துவந்தனர். இது தவிர அரசு விளம்பர பதாகைகள் வைக்கும் ஒப்பந்தமும், தமிழகம் முழுவதும் செய்து வந்தனர். மூன்று பேரும், முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர, முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. ரூ 50 கோடிக்கு மேல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, முருகானந்தம், பழனிவேல் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேர் வீடுகள், வணிக வளாக அலுவலகங்கள் உள்ளிட்ட, 6 இடங்களில், முப்பதுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இன்று காலை முதல், சோதனை செய்து வருகின்றனர். இது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரியும் முருகானந்தம் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..

மேலும் இவர்கள் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி நெருங்கிய தொடர்பில் இருந்தாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here