பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்

462

முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு ‘நல்லதொரு குடும்பம் ‘ திரைப்படத்தில் ‘ செவ்வானமே பொன் மேகமே ‘ பாடலின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

தமிழில் பிரபலமடைந்த ‘முத்து’ படத்தின் ‘குலுவாலிலே’, ‘அலைபாயுதே’ படத்தில் ‘அலைபாயுதே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ‘ஓமணப் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்கள் கல்யாணி மேனன் பாடியவை தான்.

அதிகம் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார் .

உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டவர் இன்று மதியம் காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது .

நாளை சென்னையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here