விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேவுள்ள வீட்டில் நடிகை அமலா பாலும், அவரது நண்பரும் ஜெய்ப்பூரை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளருமான பவீந்தர்சிங்கும் ஒன்றாக தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணமோசடி செய்ததாகவும் பவீந்தர் சிங் மீது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அமலா பால் தரப்பில் அவரது மேலாளர் விக்னேஷ் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, அமலா பாலுக்கு தொல்லை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட அவரது நண்பர் பவீந்தர் சிங்கை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.