பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் அவர்கள் சேலத்தில் இன்று காலமானார்

1126

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வருகின்றது சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 .05 மணி அளவில் உயிரிழந்தார்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடல் நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here