கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், போன்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.