பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு அழைப்பு.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில்களில் இவர் பணியாற்றி வருகிறார். இதேபோல் மகாராஷ்டிராவை சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரெயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.