திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், அரித்துவாரமங்கலம்
காவல் சரகத்தை சேர்ந்த A+ ரவுடி சடையங்கல் செல்வகுமார் (எ) செல்வகுமார்,
த/பெ.முருகையன், குடியானத்தெரு, சடையங்கால், (Harithuvarmangalam
Rowdy H.S No.18/15) என்பவர் பல்வேறு கொலை மற்றும் கொலைமுயற்ச்சி
உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
இவர்மீது
திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்திலும்
வழக்குகள் நிலுவையில்
நிலுவையில் உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில்
அய்யம்பேட்டை காவல்நிலையம்,
மருத்துவகல்லூரி காவல்நிலையம், கும்பகோணம் கிழக்கு காவல்நிலையம்,
மற்றும் திருச்சி K.K.நகர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் இவர்
மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் மூன்று கொலைமுயறச்சி வழக்குகள்
உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் இருந்துவருகிறது.
அம்மாபேட்டை
காவல்நிலையம்,
இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது சொந்த அத்தை மகனான
ராஜ்மோகன் என்பவரை காரில் கடத்திவந்து கொலை செய்த வழக்கில் கைது
செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்த போது, பாதுகாப்பில் இருந்த
சிறைகாவலரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக திருச்சி K.K. நகர் காவல்
நிலையத்தில் இவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன் திருச்சி மத்திய
சிறையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து
புதுக்கோட்டை சிறையில் இருந்து வந்தவர், கடந்த 25.07.2023-ந் தேதி
நீதிமன்ற பினையில் வெளியேவந்தவர், தனது அத்தை மகனும் இறந்ததுபோன
ராஜ்மோகனின் தம்பியான பாலகிருஷ்ணன் என்பவரை தொலைபேசியில்
மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் கொடுத்த புகார் தொடர்பாக
இவர்மீது தஞ்சாவூர் மருத்துவகல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டு அவ்வழக்கில் கைது செய்யப்படாமல் தலைமறைவு குற்றவாளியாக
இருந்து வருகிறார்.
மேலும் அரித்துவாரமங்கலம் காவல் நிலைய குற்ற எண்: 23/2008, u/s
294(b),326, 307 IPC -PT வழக்கில் மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில்
தொடர்ந்த ஆஜராகமல்
ஆஜராகமல் இருந்து வந்ததால் இவர்மீது பிடிக்கட்டளை
பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றபடாமல் நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று (23.12.2023) அரித்துவாரமங்கலம் காவல் உதவி
ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் காவலர் 831 திரு.சிவானந்தம் அகிய
இருவரும் மேற்கண்ட செல்வகுமாருக்கு எதிரான பிடிகட்டளையை
நிறைவேற்றுவதற்காக அரித்துவராமங்கலம் காவல் நிலைய சரகங்களில்
செல்வகுமாரை தேடி சென்றபோது இரவு சுமார் 11.45 மணியளவில் வீராணம்
வெட்டாத்துபாலம் அருகில் நின்று கொண்டிருந்து செல்வகுமார் காவல் உதவி
ஆய்வாளர் திரு.முருகேசன் மற்றும் காவலர் 831 திரு.சிவானந்தம் ஆகியோரை
கண்டதும் உதவி ஆய்வாளர் முருகேசனை கையால் தாக்கிவிட்டு தான்
வைத்திருந்த வீச்சருவாளால் தாக்க முற்பட்டுள்ளார். சுதாரித்துகொண்ட
இருவரும் செல்வகுமாரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்பித்து
ஒடிய செல்வகுமார் வெட்டத்துபாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். அவர்
பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு
ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட பிடிகட்டளை
ளையை நிறைவேற்ற சென்ற உதவி
ஆய்வாளரை கையால் தாக்கி வீச்சருவாளால் தாக்க முயன்ற குற்றத்திற்காக
இவர்மீது அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு
கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.