பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக பாம்பன் ரயில் பாலம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை பாம்பன் ரயில் பாலம் மீது கிரேன் மற்றும் மிதவை மோதியது குறிப்பிடத்தக்கது.