பதிவுத் துறையில் வருகிறது மாற்றம்; சென்னை, மதுரை மண்டலங்கள் பிரிப்பு!

244

பதிவுத் துறையில் நிர்வாக மேம்பாட்டுக்காக சென்னை, மதுரை மண்டலங்களை பிரித்து புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

இவற்றின் பணிகளை நேரடியாக கண்காணிக்க, 55 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.இதற்கு அடுத்த நிலையில் சென்னை, வேலுார், கடலுார், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, திருநெல்வேலி என, ஒன்பது மண்டலங்கள் உள்ளன.

இந்த அலுவலகங்கள் டி.ஐ.ஜி.,க்களால் நிர்வகிக்கப்படுகின்றன.பதிவுத்துறையின் மொத்த வருவாயில் 40 சதவீதம் சென்னை மண்டலம் வாயிலாகவே கிடைக்கிறது.

இங்கு பதிவுக்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நிர்வாக பணிகளும் அதிகரித்துள்ளன.

தற்போதுள்ள பணியாளர்கள், அலுவலர்களை வைத்து கூடுதல் பணிகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், புதிய மண்டலங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது:

சென்னை மண்டலத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஐந்து பதிவு மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தை இரண்டாக பிரித்து சென்னை வடக்கு சென்னை தெற்கு என, புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

அதேபோல மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திண்டுக்கல், பழனி, பெரியகுளம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி போன்ற பதிவு மாவட்டங்கள் உள்ளன.

இந்த மண்டலத்தையும் இரண்டாக பிரித்து புதிய மண்டலம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கொள்கை அளவில் அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் எந்தெந்த பதிவு மாவட்டங்கள், எந்த மண்டலத்துக்குள் வர வேண்டும் என்பதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சார் பதிவாளர் அலுவலக அளவில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் இதற்கான வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் புதியமண்டலங்கள் துவக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here