
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் நூற்றாண்டு கண்ட வெள்ளாற்று பாலம் உள்ளது..
இந்த பாலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் நகர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், வயதானவர்கள், பொதுமக்கள் என காலை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்..
இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளாறு நடைபயிற்சியாளர் நல சங்கம் என்று உருவாக்கப்பட்டு தலைவராக தொழிலதிபர் திரு எம் ஆர் மாணிக்கம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது..
இந்த வெள்ளாறு நடைபயிற்சியாளர் சங்க திறப்பு விழாவில் கவிநாடு மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா மணிகண்டன், ஆர் ராசப்பன் குருசாமி, எம் சி செல்லையா, பாரதி, பிஎல், ஆண்டியப்பன் கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..