தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் கடந்த 4 வருடங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து வந்தார்
இந்த நிலையில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை(ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,
4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.