நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் படி, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மவுனம் காப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.