
செங்கம் ஜூலை-24
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முதல் போளூர் சாலையில் உள்ள சேயாறு மேம்பாலம் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் விரிந்து காணப்பட்ட இரும்பு கம்பிகளை உயிர் மற்றும் வாகன சேதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் முறைப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நியூஸ் நவ் தமிழ்நாடு விரைவுச் செய்தியால் ஜூலை 22, 23ஆம் தேதி வெளியான செய்தி எதிரொலியால் நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால அடிப்படையில் அகற்றி முறைப்படுத்தினார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் வெளியான செய்தியால் செங்கம் நெடுஞ்சாலை துறையினர் ஜூலை 23-ஆம் தேதி 8 மணி நேரத்தில் தடுப்பு சுவர்களில் இருந்த இரும்பு கம்பிகளை அகற்றி முறைப்படுத்த உதவி இருந்த நியூஸ் நவ் தமிழ்நாடு விரைவு செய்தி நிறுவனங்களுக்கும், நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த நன்றி தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.