நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் ஊழியர்கள் அறிவிப்பு!

795

நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் அவர்களுடைய கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்பட்டதை அடுத்து காலவரையற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பண பலன்கள் உள்ளிட்ட நிலுவைகள் கொடுப்பதில் தாமதம் செய்து வருவதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தையும் தொடங்காமல் இருப்பதால் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்கள் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்தால் தினசரி அலுவலகம் செல்பவர்களும் வெளியூர் செல்பவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதால் போக்குவரத்து ஊழியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here