தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை (பிப்.10) தமிழகம் வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரு துணை ஆணையர்கள் நாளை தமிழகம் வரவுள்ளனர்.
பிப்ரவரி10, 11 ஆகிய இரு நாள்களில் தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஆணையர்கள், கட்சிப் பிரதிநிதிகளிடமும் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதன் பின்னர் புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த செல்கின்றனர்.