மதுரை, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழலை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளிக்கப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட துறை மற்றும் அலுவலருக்கு அனுப்பக்கூடாது என மனுதாரர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சியை ஊழல் சீர் குலைப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் இந்த விவகாரம் ஆழமானது என்றனர்.
மேலும் சாதாரண மனிதர்களும் குறுக்கு வழியை ஊக்குவிப்பதாக கருத்து தெரிவித்த அவர்கள், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்ததோடு, இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.